விளவங்கோடு எம்எல்ஏவாகவும், காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தவர் விஜயதரணி. இவர் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வென்று எம்எல்ஏவாக இருந்தார்.
2020ம் ஆண்டு வசந்தகுமார் எம்.பி மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட விஜயதரணி முயற்சித்தார். ஆனால், அப்போது வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயதரணிக்கு வேண்டாவெறுப்பாகவே காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கியது. எனவே இந்த முறையாவது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று விஜயதரணி காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் சார்பில் மீண்டும் விஜய் வசந்துக்கே சீட் வழங்க முடிவு செய்த்தால் விஜயதரணி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.எனவே விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி .
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தலைமை இடத்துக்கு வரமுடியாத சூழல் இருப்பதாகவும், இந்த அதிருப்தியில் தான் அக்கட்சியை விட்டு வெளியேறிதாகவும் கூறினார். பாஜகவில் இணைந்த விஜயதரணியை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று சபாநாயகர் அப்பாவுக்கு காங்கிரஸ் சட்டப்ரேவை தலைவர் செல்வபெருந்தகை கடிதம் எழுதி இருந்தார்.
இதையும் படியுங்கள்......உள்ளாடை அணியாமல் நடிகை தமன்னா
இந்நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு அவர் எழுதிய கடிதத்தை தனது X தளத்தில் பகிர்ந்துள்ள விஜயதரணி, 'எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். I am resigning from my seat as a Member of Legislative Assembly' என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விரைவில் விளவங்கோடு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா அல்லது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அவர் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment