• Breaking News

    தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலை.... 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு..... அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

     


    வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் மின்வாகன தொழிற்சாலையை சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை அமைக்கிறது. இந்த கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 50 நாட்களில் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் தென் தமிழ்நாட்டில் முதல் மின்வாகன தொழிற்சாலை அமைகிறது.இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வின்ஃபாஸ்ட் நிறுவன உயர் அதிகாரிகள், தூத்துக்குடி எம்.பி கனிமொழி, தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments