நாகப்பட்டினம்: மாற்று கட்சியில் இருந்து விலகி 50 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்


நாகையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவரும்,திமுக மாவட்ட செயலாளருமான,  என்.கௌதமன் தலைமையிலும்,முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும்,முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான  சச்சா முபாரக் அவர்களின் துணைவியாருமான நூர்ஜஹான் சச்சா முபாரக் முன்னிலையில் அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர்  திமுகவில்  நேற்று (13/02/2024)இணைந்து கொண்டனர்.

 இந்நிகழ்வில் நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான இரா. மாரிமுத்து, வரவேற்புரையாற்றினார்.கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ப.கோவிந்தராஜன் சச்சா முபாரக் பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அரும்பாடு பட்டு கட்சியை ஆரம்ப காலத்திலிருந்து வளர்த்தவர் போன்ற பெருமைக்கு உள்ளவர் என புகழாரம் எடுத்துரைத்தார்.

மாவட்ட செயலாளர் என். கௌதமன் பேசுகையில் சச்சா முபாரக் போல் நாகையில் நல்ல சிறந்த மனிதர் இருக்க முடியாது எனவும், பெருமையை எடுத்துரைத்தார்.அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.இறுதியாக சிவா நன்றியுரையாற்றினார்.



நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி. க

விளம்பர தொடர்புக்கு 9788341834

Post a Comment

0 Comments