அறந்தாங்கி அருகே குளத்திலிருந்து 5 சாமி சிலைகள் கண்டெடுப்பு


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன்வயல் குளத்தில்  பழமையான 5 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை  அடுத்த மீமிசல் அருகே குமரப்பன்வயல் கிராமத்தில் உள்ள குளத்தில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (30),கணேசன் (32), சந்தோஷ் (21) ஆகிய மூன்று பேரும்  குளித்துக்கொண்டு இருந்தபோது குளத்தின் அடிப்பகுதியில் சிலை கிடப்பது தென்பட்டுள்ளது.

இதையடுத்து வெளியே எடுத்து பார்த்தபோது அது பழமையான கல்லால் செய்யப்பட்ட சாமி சிலை என தெரியவந்துள்ளது. அதன் அருகருகே மொத்தம் 5 சாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுப்பட்டு சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் சிலைகளை கைபற்றி மணமேல்குடி வருவாய் துறையினரிடம் ஓப்படைத்தனர். குளத்தில் பழமைவாய்ந்த 5 கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது மீமிசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






Post a Comment

0 Comments