தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
அவ்வகையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 6 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் 6 பேரும் இந்திய தூதரகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்து சேர்ந்தனர். இங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

0 Comments