நம்பியூர் அருகிலுள்ள திரும நாதம்பாளையம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது


ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள திரும நாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இவ்விழா விற்கு நம்பியூர் வட்டார வளமையமேற்பார்வையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியர் பூங்கோதை தலைமை வகித்தார்.

மேலும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலாமணி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கருணாம்பாள்,வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி பிரகாசம் ஜீவானந்தம்,பாலு, சாமியப்பன் ஜானகி, கொமரசாமி பாலமுருகன் லோகநாதன் நம்பியூர் ஒன்றிய ஆசிரியர்கள் திருமநாதம்பாளையம் கருப்புசாமி ஆசிரியர் முன்னாள் மாணவர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விழா ஏற்பாட்டினை அப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்கள் ஜோதி, திருமூர்த்தி இடைநிலை ஆசிரியர்கள் தேவி  இந்துமதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். 

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments