அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமை எம்எல்ஏ அ.பண்ணாரி துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள மலையடிப்புதூாில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்டம் - சிறப்பு முகாமில் அனைத்துலக எம்.ஜி.ஆா் மன்ற துணை செயலாளா், பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாாி கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் முனைவர் ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.

கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமேஷ்குமார் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ் ஆர் பி.வெங்கிடுசாமி மற்றும் அஇஅதிமுக  நிா்வாகிகள், கல்லூாி பேராசிரியர்கள் முனைவர் ராமசாமி, முனைவர் சிவகுமார், முனைவர் பொங்கியண்ணன், முனைவர் பாரதி, முனைவர் வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மாணவ, மாணவியா், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முடிவில் முனைவர் ஆனந்தகுமார் நன்றியுரையாற்றினார்.


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments