• Breaking News

    ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொண்ட அகிலேஷ் யாதவ்

     

    காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ' பாரத் ஜோடோ நியாய யாத்திரை' பயணம் மணிப்பூரில் தொடங்கி மேகாலயா, அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் வழியாக தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் இந்த யாத்திரையில் இணையாமல் இருந்த பிரியங்கா காந்தி, மொராதாபாத் நகரில் பயணப்பட்ட நடைப்பயணத்தில் நேற்று இணைந்தார்.இந்தச் சூழலில், ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று அலிகாரிலிருந்து தொடங்கியது. அதில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று, ஆக்ராவில் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது பிரியங்கா காந்தியும் உடனிருந்தார். ராகுலின் யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்றதால் உ.பியில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    முன்னதாக, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் மட்டுமே ராகுலின் யாத்திரையில் பங்கேற்பேன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருந்தார். அண்மையில் காங்கிரஸ் - சமாஜ்வாதி தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டது. நாட்டிலேயே அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் இன்று ஆக்ராவில் நடந்த யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்றார்.

    அந்த யாத்திரையில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், “வரும் நாட்களில் நம் முன் இருக்கப்போகும் மிகப்பெரிய சவால் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதே ஆகும். அம்பேத்கரின் கனவை நினைவாக்க நாம் இதனைச் செய்ய வேண்டும். பாஜகவை ஒழிப்போம். தேசத்தைப் பாதுகாப்போம்” என்றார்.

    No comments