நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) சார்பில் வானவில் மையம் பாலின மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் உதவி திட்ட அலுவலர் கூட்டாண்மை மற்றும் கூடுகை திருமதி இந்திராணி வரவேற்றினர்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர் முருகேசன் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் திருமதி.குமாரி ஆகியோர் வானவில் மையம் மற்றும் பாலின வள மையத்தை திறந்து வைத்தனர்.
பின்பு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியை வழங்கப்பட்டது.பாலின சமத்துவ உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி மற்றும் பிற துறை அலுவலர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க
விளம்பர தொடர்புக்கு 9788341834




0 Comments