புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-1 இன் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, "தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு" திட்டத்தின் ஒரு பகுதியாக அழியாநிலை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) பாலமுருகன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். அழியாநிலை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகி ரவிக்குமார் மாணவர்களை வரவேற்று பாராட்டுரை வழங்கினார். இத்திருக்கோயில் உழவாரப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-1இன் மாணவ, மாணவியர் கோவில் வளாகத்தில் அடர்ந்து படர்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.கோயிலில் உள்ள கோசாலை மற்றும் வைக்கோல் படைப்புகளை சீர்திருத்தினர். அலகு-1 இன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனித்துரை, கல்லூரிப்பேராசிரியர்கள் ராஜலட்சுமி, அன்பரசு, கார்த்திகேயன் ஆகியோர் உழவாரப்பணியை ஒருங்கிணைத்திருந்தனர். உழவாரப்பணி ஏற்பாடுகளை அழியாநிலை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் நற்பணி மன்றச் செயலர் சுப்புராமன், துணைச்செயலர் காளிமுத்து மற்றும் பல அடியார்கள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment