நாகை அருகே சமுதாய வளப்பயிற்சிகளுக்கான மூன்று நாட்கள் பயிற்சி நடைபெற்றது

 


நாகப்பட்டினம் மஞ்ச கொல்லை மகளிர் சுய உதவி குழு அலுவலகத்தில் உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி இனிதே நடைபெற்றது. 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாகப்பட்டினம் வட்டாரத்திற்கு உட்பட்ட 29 சமுதாய வள பயிற்றுநருக்கான உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த மூன்று நாட்கள் பயிற்சி  வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நடைபெற்றது.

 இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் முருகேசன் குத்து விளக்கு ஏற்றி பயிற்சி தொடங்கி வைத்தார். வட்டார இயக்க மேலாளர் உமா அவர்கள் வரவேற்று பேசினார்  உதவி திட்ட அலுவலர் இந்திராணி  கூட்டாண்மை   மற்றும் கூடுகை அவர்களும் உதவி திட்ட அலுவலர் வாழ்வாதாரம் சந்திரசேகர் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் ஸ்ரீரங்கபாணி பயிற்சியில் உணவு, ஊட்டச்சத்து,ஆரோக்கியம் ,மற்றும் சுகாதாரம் வாழ்வாதாரத்திற்கான இணைப்பு , ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சி மற்றும் 1000 நாட்கள் பராமரிப்பு முறை, தாய் வழி ஊட்டச்சத்து,தாய்ப்பால் மற்றும் இணை உணவு,பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு,ரத்த சோகை,ஊட்டச்சத்து தோட்டம் பற்றிய பயிற்சி வழங்கப் பட்டது.

  இந்த பயிற்சி ஊட்டச்சத்து குறைபாடு  இல்லாத மாவட்டமாக உறுதி  மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.இப்பயிற்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் வைஜெயந்தி ,வட்டார வள பயிற்றுநர்கள் சத்யா உடன் இருந்தனர்.


நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் க.சக்கரவர்த்தி 

விளம்பர தொடர்புக்கு 9788341834

Post a Comment

0 Comments