திமுக எம்பி-யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் ஓபிசி பிரிவு மாநில தலைவர் பொறுப்பும் சூர்யாவுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால், பாஜக பெண் பிரமுகரிடம் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியதால் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் சூர்யா. இதையடுத்து சில மாதங்கள் அரசியல் நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கி இருந்த சூர்யாவை மீண்டும் கட்சியில் சேர்த்தார் அண்ணாமலை.இந்தநிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார் சூர்யா. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, “இப்போதெல்லாம் இரண்டு போலீஸ்காரரர்களை பாதுகாப்புக்கு வைத்துக்கொள்வது ஃபேஷனாக மாறிவிட்டது. மனுதாரர் யார் என்பது இந்த நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும்" என்று தெரிவித்த நீதிபதி தண்டபாணி, போலீஸ் பாதுகாப்புக் கோரிய சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக, சூர்யா சிவா மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடியாது என அரசு அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
.jpeg)
0 Comments