மணமேல்குடியில் கடற்பசு பாதுகாப்பு மேம்பாட்டு பயிற்சி


 தமிழ்நாடு வனத்துறை சார்பில் புதுக்கோட்டை வனக்கோட்டம்,  அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து மணல்மேல்குடியில்  கடற்பசு பாதுகாப்பு குறித்து துறைகளுக்கிடையேயான ஒருங்கினைப்பு மற்றும்  மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

 நிகழ்சியில் அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ், மீன்வளத்துறை சார்ஆய்வாளர்  கனகராஜ், மணமேல்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகையன், அழகப்பா பல்கலைகழக கடலியல் துறை பரமசிவம், ஓம்கார் நிறுவன இயக்குநர் பாலாஜி, இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த ஸ்வேதா ஐயர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 நிகழ்ச்சியில் மணமேல்குடி ஊராட்சி மன்ற தலைவர், புதுக்கோட்டை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்‌. இந்நிகழ்ச்சியில் கடல் பசு மற்றும் கடல் தாழைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றிற்கான அச்சுறுத்தல்களையும் கலந்தாலோசிக்கப்பட்டது. பாக் ஜலசந்தியில்  தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டிணம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வரை உள்ள கடல்பகுதி தமிழக அரசால் 2022ம் வருடம் கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறையால் புதுக்கோட்டை மாவட்ட 42.8 கீ.மீ நீள கடற்கரையில் உள்ள  கிராமங்களுக்கு மாலை நேரத்தில் நேரில் சென்று அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை மற்றும் இன்னும் பிற அரிய உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments