• Breaking News

    பள்ளிபாளையம் அருகே டாஸ்மாக் கடை பார் ஊழியரை தாக்கிய நான்கு பேர் கைது


    பள்ளிபாளையம் அடுத்த தாஜ் நகரில் வசிப்பவர் மணிகண்டன், (27). இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. வெப்படை அருகே உள்ள ஆனங்கூரில் உள்ள டாஸ்மாக் கடை மதுபான பாரில் வேலை செய்து வருகிறார். நேற்றுஇரவு வேலை முடிந்து வரும் போது, சின்ன ஆனங்கூர் அருகே நடந்து வந்த போது, அவரை வழிமறித்து நான்கு பேர் அடித்து, உதைத்தனர். இது குறித்து மணிகண்டன் வெப்படை போலீசில் புகார் செய்தார். எஸ்,ஐ. பாலமுருகன், மலர்விழி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கனூரை சேர்ந்த நித்திஷ், (22), அண்ணா நகரை சேர்ந்த, சக்திவேல், (19), ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த கவுதம், (23), தேனியை சேர்ந்த அஜித், (24), ஆகிய நான்கு பேர்களை கைது செய்தனர்.

    No comments