ஆ.ராசாவின் வாயை கிழிக்காமல் விடமாட்டேன்...... ஆவேசமான அதிமுக மாவட்ட செயலாளர்....... - MAKKAL NERAM

Breaking

Friday, February 2, 2024

ஆ.ராசாவின் வாயை கிழிக்காமல் விடமாட்டேன்...... ஆவேசமான அதிமுக மாவட்ட செயலாளர்.......

 

அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்

முன்னாள் முதல்வரும்,  அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் குறித்து திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக  முன்னாள் அமைச்சர்கள் ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆ.ராசாவின் வாயை வெட்டுவேன் என்று அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பேசியுள்ளார்.


பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தை முன்வைத்து திமுக அரசைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அதன்படி மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ பாரதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், ஆ. ராசாவின் வாயை கிழிப்பேன் என்று பேசியுள்ளார்.   "எம்ஜிஆர் குறித்து ஆ.ராசா அவதூறாக பேசியுள்ளார். இந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் அவர் இப்படி அவதூறாக பேசிவிட முடியுமா? நான் வாழ்நாள் பூராவும் சிறையில் இருந்தாலும் பரவாயில்லை,  ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை,  என் உயிரே போனாலும் பரவாயில்லை.  என்னுடைய தலைவரை அவதூறாக  பேசிய ஆ. ராசாவின் வாயை கிழிக்காமல் விடமாட்டேன்" என்று அவர் ஆவேசமாக பேசினார்.

No comments:

Post a Comment