• Breaking News

    அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடியில் வர்த்தக நலசங்கம் சார்பில் தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மகளிர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன், வர்த்தக நலசங்கத் தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தனியார் சிறப்பு மருத்துவர் கல்பனா கலந்து கொண்டு முகாமில் பெண்களுக்கு பரிசோதனை செய்து கருத்தரிப்பு குறித்து விளக்கம் அளித்தார் . மேலும் இந்த முகாமில் மாவட்ட துணைத் தலைவர் வாஹிது, மாவட்டத் துணைச் செயலாளர் பிரபு, செயலாளர் செல்வம்  உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள்,100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    No comments