ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் , வேம்பத்தி ஊராட்சியில்நபார்டு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 266இலட்சம் மதிப்பீட்டில் அந்தியூர் ஆப்பக்கூடல் சாலை முதல் நல்லாமூப்பனார் வழியாக எட்டிகுட்டைபாளையம் செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் விவேகம் பாலு, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் வையாபுரி, முன்னாள் ஊராட்சி செயலாளர் மாணிக்கம், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன், விவசாய அணி துணை அமைப்பாளர் பாலுச்சாமி,நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முருகன் மற்றும் செல்வன் , கணபதி , பெருமாள் ராமசாமி , சொக்கன் ஓசைப்பட்டி பாலு, மாதையன் , காளியப்பன் பழனிச்சாமி , மகாலிங்கம் சுரேஷ், பழனிச்சாமி, ராஜகோபால் , நந்தீஸ்வரன், சொக்கப்பன், சண்முகம் ஜீவபாரதி , பேபி சொக்கப்பன் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments