இன்றைய ராசிபலன் 01-03-2024
மேஷம் ராசிபலன்
உங்கள் பாதையை தவறவிடாதீர்கள். மேலும், தவறான தூண்டுதல்களிலிருந்து விலகிச் செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். உங்கள் விடாமுயற்சிகுரிய உழைப்பு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும். உங்களை சிக்கல்களுக்கு உள்ளாக்காத சில நல்ல நண்பர்கள், உங்களைத் தொடர்பு கொள்ளவர். இன்று, புதிய நிதி முதலீடுகள் அல்லது கடன் வழங்குவது குறித்து நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது செலவுகளை மதிப்பிடு செய்வதற்கும், அதற்கேற்ப நிதியினை ஒதுக்குவதற்கும் இது ஒர் சிறந்த நாளாக இருக்கும்.
ரிஷபம் ராசிபலன்
நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருப்பது, நீங்கள் வெற்றிக் கோப்பைக் கொண்டு அக்களிக்கும் போது உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் இலக்கை அடைய நீங்கள், தடையாக இருக்கும் எந்த ஒரு சிறிய தடையையும் கூட கண்டுபிடித்து அதை வெளியே எடுத்து எறிந்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் திறமையாகவும் பாராட்டத்தக்க விதத்திலும் ஏதாவது செய்கிறீர்கள்! உங்களுக்கு இன்று சில உதவிகள் தேவைப்படலாம் அல்லது நிபுணர் ஆலோசனை தேவைப்படலாம். உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் கூட, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து வரும் நல்ல ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளுங்கள், கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்களது முயற்சிகள், குறுகிய காலத்தில் பாராட்டைப் பெறப் போகின்றன.
மிதுனம் ராசிபலன்
மற்றவர்களைப் புண்படுத்தும் எண்ணங்கள் உங்களையே அழித்து விடலாம். எனவே, வரம்பை மீறிச் சென்று விட வேண்டாம். இந்த அனுபவங்கள் தான் உங்களைப் பலப்படுத்தியுள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்பு வைத்துக் கொள்ளுதல் என்பது இன்று ஒரு சவாலாக உள்ளது. உங்கள் சகாக்களுடன் நீங்கள் நன்றாகப் பழகுவதாகத் தெரியவில்லை. தவறான செய்திகளை வெளிப்படுத்தக்கூடிய உங்கள் உடல் மொழியைக் கண்காணியுங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்றும் அவர் சார்ந்த சூழ்நிலைகளில் உள்ள நேர்மறையான குணங்களைக் தெரிந்து கொள்ள உங்கள் மனதைத் திறந்திடுங்கள். மற்றவர் மீது பழிபோடுவதைத் தவிர்த்து, உங்களுக்கு அவசியமில்லா நபர்களிடம் கூட, கரிசனையோடு இருங்கள். இலட்சியத்தோடு பணியினைச் செய்வதற்கு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து புனரமைப்பு செய்யுங்கள்.
சிம்மம் ராசிபலன்
படைப்பாற்றல் இன்றுசிறப்பாகச்செயல்படுகிறது. இதை நீங்கள் இன்று அல்லது இந்த வாரத்திற்குள் சிறிது நேரம் செலவிட்டு அதை வெளிப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் உடல்நலம் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துங்கள். இதற்காக மற்றவர்களிடம் உதவி கேட்க வெட்கப்பட வேண்டாம். இந்த நேரத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்பதால் மகிழ்ச்சியாக இருங்கள்.
கன்னி ராசிபலன்
இன்று, உங்களது மனதில் நிறைய விஷயங்கள் நிறைந்துள்ளன. நிறைய விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உங்களது கவனம் உடனடியாக தேவைப்படும் விஷயங்களில், உங்கள் ஆற்றலை மையப்படுத்தத் தெரிவு செய்யுங்கள். இன்று, உங்களது குறும்புத்தனமான செயல்களிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. ஆகவே, இன்று, ஏதாவது ஒன்றை சற்று வேகமாக எடுக்க நீங்கள் ஆசைப்பட்டாலும் கூட, அதை செய்ய வேண்டாம். அனைத்தும் உங்களுக்கு செலவு வைத்துவிடும். அவசரகதியில் வார்த்தைகளை கொட்டித் தீர்ப்பதையும், மனக்கிளர்ச்சியால் எடுக்கும் முடிவுகளையும் தவிருங்கள்.

துலாம் ராசிபலன்
அதைப் போலவே, சில விசயைங்களைச் சொல்வது மக்களைக் காயப்படுத்துகிறது. சில நேரங்களில், உங்கள் மனசாட்சி உங்களிடம் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் மனசாட்சியுடன் பேசுவதில் எந்த தவறுமில்லை. உங்கள் சுயநலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மற்றவர்களின் உணர்வுகளும் முக்கியம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இன்று, நீங்கள் சொல்லும் விஷயங்கள் உங்களைப் போற்றும் ஒருவரைக் காயப்படுத்தாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம் ராசிபலன்
கூட்டத்தில் தனியாக இருப்பது போல உணர்கிறீர்களா? அது நீங்கள் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டிய ஒன்று தான். புதிய நட்பைப் பெற நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால், உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படலாம். பரபரப்பான மற்றும் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் உங்களுக்குக் காத்திருக்கின்றன. இந்த நாளில், உங்களுக்காக வரிசையாகக் காத்திருக்கும் இன்பமான செயல்களை நிதானமாக அனுபவியுங்கள். மோசமான எண்ணங்களை விட்டுவிட்டு, ஆனந்தத்தைச் சிறந்த முறையில் அனுபவியுங்கள்.

தனுசு ராசிபலன்
சில விஷயங்கள் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். அந்த விஷயங்கள் உங்களுக்குள் தொடர்ந்து இருக்கின்றனவா? நீங்கள் இன்னும் அவற்றை உண்மையாக்க விரும்புகிறீர்களா? இன்று, உங்கள் உள்ளுணர்வு என்ன பேசுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்கள்உங்களுக்குத்துரோகம் செய்ய மாட்டார்கள். உங்கள் எண்ணங்களுக்கு உங்கள் மனம்எப்படித்தீர்வுகளைத் தருகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்களே அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். தோல்விகளை ஏற்காதீர்கள். எழுச்சி கொண்டு வேலை செய்யுங்கள் அதிர்ஷ்டம் வெகு தொலைவில் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.

மகரம் ராசிபலன்
சுய இரக்கம் என்பது கடந்த சில நாட்களாக நீங்களே மூழ்கடித்து விட்டீர்கள். இதனால், உங்கள் உணர்திறன் இயல்பு நிலையில் இல்லாமல் இருப்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை வழிநடத்தும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த வழியில், உங்களுக்கே உள்ள ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம்.

கும்பம் ராசிபலன்
உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கவும். மாறாக, நல்ல விஷயங்களைக் கேட்பவராக இருக்க முயற்சி செய்யுங்கள். தப்பான எண்ணங்கள் ஒதுக்கி வைத்து, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருங்கள். பல்வேறு விஷயங்களில் மக்கள் உங்களுக்காக ஆலோசனை பெறுவார்கள். நீங்கள் நன்கு அறிந்த விஷயங்களில் மட்டுமே, உங்கள் கவனத்தைச் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலும் உங்களுக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையிலும் நீங்கள் நிறையச் செல்வாக்கைச் செலுத்துகிறீர்கள். செயல்படுத்த வேண்டிய நேர்மறையான மற்றும் மேம்பட்ட விஷயங்களைத் தேர்வு செய்யவும். இது உங்கள் வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மீனம் ராசிபலன்
இன்றைய நாளில் தாராள மனப்பான்மையுடன் செயல்படுவது மிகவும் அவசியம். முகத்தில் புன்னகையை மட்டும் வைத்துக் கொண்டு, முரட்டுத்தனமாகவும், இரக்கமற்ற மனிதராகவும் இருக்கக் கூடாது. நேர்மறை ஆற்றலுடன் இருப்பது இந்த நாள் முழுவதையும் நல்ல நாளாக மாற்ற உங்களுக்கு உதவும். இதன் மூலம் நிறைய நல்ல விஷயங்களால் நீங்கள் ஈர்க்கப்படுவீர்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, பயம் காரணமாக கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் பொருளாதார நிலைமை நிலையாக இருக்கிறது. ஆகையால், எதிர்காலத்திற்கான புதிய முயற்சிகள் பற்றிச் சிந்திக்கத் தொடங்குங்கள்.
No comments