• Breaking News

    பொன்னமராவதி அருகே சேரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சேரனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.சேரனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மின்னொலி கலையரங்கில் நடைபெற்ற முதலாமாண்டு ஆண்டு விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் இராமதிலகம்,இலாஹிஜான், தலைமையாசிரியர் இராஜகுமாரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வட்டார வள மேற்பார்வையாளர் ( பொறுப்பு ) சிவக்குமார்,சேரனூர் ஊராட்சி மன்றத்தலைவர் காமராஜ்,ஊர் முக்கியஸ்தர் மிராசு சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் யசோதா,இடைநிலை ஆசிரியை சூர்யா (தற்காலிகம்) ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள்.ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாமிக்கண்ணு,வார்டு உறுப்பினர் சதீஷ்குமார்,தேவராஜன்,முத்துக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.தலைமையாசிரியர் இராஜகுமாரி ஆண்டறிக்கையை வாசித்தார்.பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் முறையாக தொடங்கிய ஆண்டு விழாவில் பரத நாட்டியம், மாணவ, மாணவிகளின் நடனம், பாட்டு மன்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் சேரனூர் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள்,முன்னாள் இந்நாள் புரவலர்கள்,முன்னாள் மாணவர்கள்,ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


    இரா.பாஸ்கர் செய்தியாளர்


    No comments