ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நவாஸ் கனி மீண்டும் போட்டி..... மண்ணை கவ்வுவது உறுதி...... கொந்தளிக்கும் யாதவ சமுதாயம்......
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபிபுர் ரகுமான். மாவட்ட செயலாளர் ஹக்கீம் மற்றும் மாநில முழுவதும் இருந்து திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் நவாஸ் கனி , ஏணி சின்னத்தில் போட்டியிடுவார் என்று தேசிய தலைவர் காதர்மொய்தீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற அயராது பாடுபடுவது, பாஜக ஆட்சியை அகற்ற அயராது உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதற்கிடையே ராமநாதபுரம் மக்களவை தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கியதால் திமுகவினர் அதிருப்தியில் இருந்துவருகின்றனர்.காரணம் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கடந்த 17-06-2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றத.இந்த விழாவில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பி நவாஸ் கனி உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பரிசளிப்பு விழா நவாஸ் கனி எம்பி வருவதற்கு முன்பு துவங்கியதாக கூறப்பட்டது. அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வந்த நவாஸ் கனி எம்பி கோபமடைந்தார். இதுபற்றி அவர் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து ஆட்சியர் விஷ்ணு சந்திரன், நவாஸ்கனிஎம்பியை சமாதானம் செய்ய முயன்றார்.
இதற்கிடையே அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அவர்களின் ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நவாஸ் கனி எம்பி மற்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோரை சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே நிலைத்தடுமாறி அருகில் உள்ள இருக்கையில் விழுந்தார். இதனால் இன்னும் பரபரப்பு அதிகரித்தது. இருப்பினும் ஒரு கட்டத்தில் மோதல் முடிவுக்கு வந்தது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்பி ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் அனைத்து தரப்பு மக்கள் மற்றும் கட்சியினர் முன்பு நடந்தது. இந்த மோதல் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி, ராமநாதபுரத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு மக்களவை தொகுதி உறுப்பினரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சிக்கு ஒதுக்கியதில் அதிருப்தியில் இருந்த திமுகவினர் நாவாஸ் கனியை மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக அறிவித்ததால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் திமுகவினர்.
மேலும் யாதவ சமுதாய மக்களும் கொந்தளிப்பில் உள்ளனர். இது குறித்து யாதவ சமுதாய மக்கள் கூறுகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவாஸ்கனி எம்பி ஆகுவதற்கு காரணம் ஒட்டு மொத்த யாதவ சமுதாயத்தின் முதல்வராக திகழ்கின்ற அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தான். ஆனால் அந்த நன்றி கூட இல்லாமல் பொது இடத்தில் அவரை ஒருமையில் பேசியுள்ளார் நவாஸ்கனி. நான் எம்பி ஆக வெற்றி பெற அமைச்சர் ராஜகண்ணப்பன் முக்கிய காரணம் என நவாஸ்கனியே தெரிவித்துள்ளார். ஆனால் அவரையே பொது இடத்தில் ஒருமையில் கை நீட்டி பேசியதால் ஒட்டு மொத்த யாதவ சமுதாய மக்களும் கடும் கோபத்தில் உள்ளனர். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக யாதவ சமுதாய வாக்குகள் உள்ளன.மீண்டும் நாவாஸ்கனியை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அவர் மண்ணை கவ்வுவது உறுதி. அவரை வீட்டுக்கு விரட்டுவது யாதவ சமுதாய மக்களின் வேலை என ஆவேசமாக தெரிவித்தனர். இது ஒரு புறம் இருக்க அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் என்ன செய்ய போகிறார்..... நவாஸ்கனிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலையிலும், வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.......
No comments