இந்தாண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டித் தொடர், வரும் ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை, அமெரிக்காவும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, வரும் ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் வெற்றிப் பெறுவது என்பதைத் தாண்டி, தேசப்பற்றும், மத உணர்வும் கலந்து இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும். மைதானத்தில் ரசிகர்களின் கூட்டமும் நிரம்பி வழியும். அதனால், ஜூன் 9ம் தேதி நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை, லட்சம் முதல் கோடி வரைவில் பணத்தை கொட்டி வாங்குவதில் ரசிகர்களிடையே போட்டோ போட்டியே நடக்கிறது.தற்போது ஜூன் 9ம் தேதி நடக்க உள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி டிக்கெட் விலையும் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது.
அதிகாரப்பூர்வ டிக்கெட் விற்பனை தளத்தில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.40 ஆயிரம் ஆக இருந்த நிலையில், அதை வாங்கி மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ரூ.1.86 கோடி வரை தற்போது டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பணத்தை பற்றி கவலைப்படாமல், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வருகின்றனர். கிரிக்கெட் அறிமுகமாகி பல்லாண்டுகளை கடந்தும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான மவுசு, இன்று வரையில் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
No comments:
Post a Comment