மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரி நகரில் 15 வயது சிறுமியை 52 நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் 2021 ஜனவரி 27 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் 52 பேர் மீது பலாத்காரம் செய்ததாக போலீஸார் வழக்குப் பதிவ செய்தனர்.இந்த வழக்கின் விசாரணையில், சிறுமியை அவது தாய் கீதா பணத்திற்காக கடந்த 2020 முதல் 2021-ம் ஆண்டு வரை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியது தெரிய வந்தது. முதன் முறையாக அந்த சிறுமியை அபிநந்தன் என்பவர் பயன்படுத்தியுள்ளார். அப்போது அவர் வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டி பலருக்கு இரையாக்கியது தெரிய வந்தது. கர்நாடகா மாநிலத்தை உலுக்கிய இந்த போக்சோ வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இந்த வழக்குத் தொடர்பாக ஒரே வழக்கில் 38 குற்றப் பத்திரிகைகளை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். இறுதியாக, அனைத்து விவகாரங்களையும் பரிசீலித்த நீதிபதி சாந்தண்ணா, சிறுமியின் தாய் கீதா, கிரிஷ், தேவி சரண் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அபிநந்தன் என்ற ஸ்மால் அபிக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தலா 25 ஆயிரம் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இவ்வழக்கில் இருந்து 49 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.பெற்ற மகளை விபசாரத் தொழிலில் தள்ளிய தாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது கர்நாடகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments