சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு இது தான் பெயர்...... சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்.....
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளத்திற்கு சிவசக்தி என பெயரிடுவதாக பிரதமர் மோடி அப்போது அறிவித்தார். சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டிருக்கிறது. சக்தி அந்தத் தீர்வுகளை செயல்படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாக சிவசக்தி என பெயரிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
பிரதமர் மோடி அறிவித்த 6 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி ஒன்றியத்தின் கிரக அமைப்புகளுக்கான பெயரிடும் பணிக்குழு, சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ஸ்டேடியோ சிவசக்தி என்ற பெயரை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அந்த இடம் இனி சிவசக்தி என்றே விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் அடையாளப்படுத்தப்படும். இது இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்று கருதப்படுகிறது.
No comments