கும்பகோணம்: 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..... 50 வயது பெண் கைது...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, March 20, 2024

கும்பகோணம்: 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..... 50 வயது பெண் கைது......

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி விழுந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 50). இவர், கும்பகோணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 16-ந் தேதி அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுவன் ஒருவன் இடைவேளை நேரத்தில் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவனை பின் தொடர்ந்து கழிவறைக்குள் சென்ற கோகிலா, அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து வேறு யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று அந்த சிறுவனை மிரட்டி உள்ளார். ஆனால் அந்த சிறுவன் நடந்த சம்பவங்களை தனது அண்ணனிடம் தெரிவித்துள்ளான். இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் சிறுவனின் பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், கோகிலா மீது கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் கோகிலா மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment