நாமக்கல்: தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் 29 கிலோ எடையுள்ள ரூ.6.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது கண்டறியப்பட்டது. அந்த தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த தங்க நகைகளை எடுத்து வந்தவர்களை பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments