• Breaking News

    ஏ.வி.சி.கல்லூரித் தமிழாய்வுத் துறையில் முனைவர் துரை.குணசேகரன் அறக்கட்டளைச் சொற்பொழிவு


    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பெற்றுள்ள முனைவர் துரை.குணசேகரன் அறக்கட்டளைச் சார்பில் பெண்மைப்புனைவு: அரசியலும் தகர்த்தலும் என்னும் பொருண்மையில் வியாழக்கிழமை பொருளாதாரத்துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. 

    08/03/2024 ஆம் நாள் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவில் வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் ரு.சாந்தி தலைமையேற்று நடத்தினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சு.தமிழ்வேலு அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி, தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ஜெ.சியாமளா மகளிர் நாள் கொண்டாட்டத்துடன் இணைந்துள்ள உலக பெண் அரசியல் நிலையையும் உண்மையான பெண்ணெழுச்சி தோன்றுமிடத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினார். பழங்குடியின மக்களில் பெண்களின் சடங்குகள், அவர்களின் வலி, முலைகள், வலி, அர்த்தநாரி போன்ற கவிதைகள், ஷோவேல்டர் கோட்பாடுகள், வாங்டே மைத்தாய் சிந்தனைகள், பாப்லே நெருடா, மேலைநாட்டு பெண்ணியச் சிந்தனையாளர்கள், மாலதி மைத்ரி, சல்மா, குட்டி ரேவதி, கனிமொழி, போன்ற தமிழ் பெண் கவிகளின் கருத்தியல்கள் ஆகியவைகளை ஆய்வு நோக்கில் எடுத்துக்காட்டிப்பேசினார். நிகழ்வில் முனைவர் துரை.குணசேகரன் சிறப்புரையாளரை பாராட்டியும் நினைவுப்பரிசு வழங்கியும் பெண் நிலை வளர்ச்சியில் இந்த உலகம் செல்ல வேண்டிய தூரம், அடைந்துள்ள இலக்கு, வளர்ச்சியடைய வேண்டிய துறைகள், கல்வி மற்றும் இலக்கிய உலகில் பெண்களின் இருப்பு பெண்களின் நிலை, வளர்ந்து வந்த பாதை, பெண்கள் கொள்ள வேண்டிய எழுச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி பேசினார்.

    இக்கருத்தரங்கில் பிற துறைப்பேராசிரியர்கள், பொருளியல் துறைத்தலைவர் முனைவர் இரா.கார்த்திகேயன், தமிழ்த்துறை மாணவ மாணவியர்கள்,  முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் இரெ.மருதசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா.மஞ்சுளா வரவேற்புரையும் உதவிப்பேராசிரியர் முனைவர் மா.சியாமளா தேவி நன்றியுரையும் வாசித்தார்கள். தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள், உதவியாளர் பாலா ஆகியோர் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.

    No comments