நாகை: வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்,நிர்வாகிகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி வேதாரண்யம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 29.02.24 முதல் 02.03.2024 வரை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குனர் திட்ட இயக்குனர் முருகேசன் அறிவுத்தலின் படி வட்டார இயக்க மேலாளர் அம்புரோஸ்மேரி தலைமையில் நடைபெற்றது.
இதில்மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி வட்டார கூட்டமைப்பின் கடமைகள் பொறுப்புகள் சேவைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மாற்றம், நிதி மேலாண்மை, கணக்கில் கொள்கை, உள் கட்டுப்பாடு, நிதி அறிக்கை சேமிப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள்,வாழ்வாதார திட்டங்கள்,நிதி சேவைகள்,காப்பீடுகள் தொழில்நுட்ப உதவிகள், நிதி மேலாண்மை, நிதி மேலாண்மையின் படிநிலைகள்,தீர்மானம் புத்தகம் ,வரவு ரசீது, பணம் செலுத்துதல் ரசீது,ரொக்க புத்தகம், பொது பேரேடு, கடன் பேரேடு, சொத்து இருப்பு பதிவேடு, காசோலை பதிவேடு,பணியாளர்களின் சம்பள பதிவேடு வங்கி அறிக்கை, உள் தணிக்கை,பட்டய தணிக்கை,தர மதிப்பீடு,சிறப்பு திட்ட நிதி BLFநிதி,நிதிநிலை அறிக்கை, தொழில்நுட்ப சேவைகள்,பதிவேடுகள் பராமரித்தல், அரசுத் திட்டங்கள் மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்,ஆண்டு திட்டம்,போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டது.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
விளம்பர தொர்புக்கு 9788341834
No comments