தஞ்சை: நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MAKKAL NERAM

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 23, 2024

தஞ்சை: நடைபயிற்சி சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19- ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் முனைப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், பிரசாரம் உள்ளிட்டவை அனைத்து கட்சிகளாலும் தொடங்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் வாக்கு சேகரித்தார்.அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக கொரடாச்சேரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். அதற்காக நேற்று இரவு தஞ்சை வந்து தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலின் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது காமராஜர் மார்க்கெட்டில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அதேபோல ஸ்டேடியத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களிடமும் சென்று வாக்குசேகரித்தார். கீழராஜ வீதியில் சென்றபோது அங்குள்ள  தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் குடித்தார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, எம்.பி பழனிமாணிக்கம் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் பொதுமக்கள் பலரும் அவருடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். முதல்வரின் இந்த நடைபயிற்சி வாக்குசேகரிப்பால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here