• Breaking News

    அறந்தாங்கி அருகே இடிந்து விழும் நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி ஊராட்சி தட்டான்வயல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமடைந்த நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. 

     இந்த சுற்றுச்சுவர்களில் பெரிய அளவில் ஓட்டை இருப்பதால் ஆடு, நாய் போன்ற கால்நடைகள் பள்ளியின் உள்ளே வந்துவிடுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அச்சமடைகின்றனர்.  எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை இடித்துவிட்டு புதிய சுற்றுச்சுவர் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    No comments