• Breaking News

    அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1, புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் மற்றும் ராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய  போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கூட்டம்  கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) பாலமுருகன் தலைமையுரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்குப்பிரிவு (பொ) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேன்தமிழ் வளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றினார். 

    ஆங்கிலத் துறைத்தலைவர்  கணேசன், தமிழ்த்துறைப் பேராசிரியை ராஜலட்சுமி, புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயராமன், ஆலங்குடி மதுவிலக்குப்பிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி , ஆவுடையார்கோயில் காவல் ஆய்வாளர் விஜய் கோல்டன் சிங், காசியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சர்வம் சரவணன், தமிழ்நாடு தன்னார்வர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வாசிக்க, அவையில் கூடியிருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு , தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.இக்கூட்டத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள், தலைமைக்காவலர்கள், காவலர்கள், அலுவலகப்பணியாளர்கள், மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர். 

    முன்னதாக திட்ட அலுவலர் பழனித்துரை அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    No comments