மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு அதிமுக சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். வேட்பாளர் அறிமுகக்கூட்டம்,இன்று செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.வி.பாரதி,மா சக்தி ரெங்கநாதன் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர், கோமல் ஆர் கே அன்பரசன் அதிமுக பொறுப்பாளர்கள்,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் ப.பாபு,தான் வெற்றிபெற்றால்,மத்திய அரசின் உதவியுடன்,மயிலாடுதுறை தொகுதி வளர்ச்சியடைய பாடுபடுவேன் என்று கூறினார்.
No comments