• Breaking News

    மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த போதை டாக்டர்

     

    மராட்டிய மாநிலம் சத்ரபதி சப்கஞ்ச்நகர் மாவட்டம் பிட்கின் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் நிர்வாணமாக சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போதைப்பழக்கத்திற்கு அடிமையான டாக்டர் மதுபோதையில் மருத்துவமனை வளாகத்தில் நிர்வாணமாக சுற்றித்திரிந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு செல்லும்முன் டாக்டர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரிந்த காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி டாக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    No comments