• Breaking News

    ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ்

     

    ராமநாதசுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம். அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை (20.03.2024)-க்குள் தெரிவிக்கும்படியும் நாளிதழ்களில் (28.02.2024) அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments