திருச்சி அருகே துவாக்குடியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது

 

திருச்சி அருகே துவாக்குடியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.ஆண்டு முழுவதும் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் முனைவர் சூ.ச.ரோஸ்மேரி அவர்கள் தலைமை தாங்கினார்.கல்லூரியின் விளையாட்டுத்துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி.டேவிட் லிவிங்ஸ்டன் அவர்கள் வரவேற்புரை வழங்கினாா்.

 கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் ஆனந்தன் அவர்கள் ஆண்டறிக்கை நிகழ்த்தினார்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் அ. மெகபூப் ஜான் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற கருத்திற்கு இணங்க நல்ல உடல் நலம் இருந்தால்தான் படிப்பு மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறினார். அதற்கு மாணவர்கள் விளையாட்டு,யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும, மேலும் அவர் உரையாற்றும் போது ஒரு நல்ல பட்டப் படிப்புடன் ஒரு விளையாட்டு சான்றிதழும் இருந்தால் எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள், கராத்தே போட்டிகள், மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள்  மற்றும் காவேரி மருத்துவமனை நடத்திய மாரத்தான் போட்டிகள் போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டும் பரிசளிப்பும் நடைபெற்றது.வணிகவியல் துறை இணை பேராசிரியரும்  விளையாட்டு குழு உறுப்பினருமான முனைவர் வெ.செல்வராணி நன்றி கூறினார்.துறைத்தலைவர்கள்,  பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments