எல்.எல்.ஆர் உரிமத்துக்கு இனி 'இ-சேவை' மையங்களில் விண்ணப்பிக்கலாம்
வாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்து கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது எல்.எல்.ஆர். (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் இணையதள மையங்களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது.
இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.வாகனங்களை ஓட்டி பழகுவதற்கான எல்.எல்.ஆர் உரிமத்தை பெற இன்று முதல் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments