• Breaking News

    தங்கத்தின் விலையை திமுகவால் குறைக்க முடியுமா….? பிரேமலதா விஜயகாந்தை கேலி செய்யும் நெட்டிசன்கள்.....

     

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொயருவர் மாறிமாறி விமர்சனமும் செய்து வருகிறார்கள். அந்தவகையில் “தங்கத்தின் விலையை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா?” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது இணையத்தில் கேலிக்குள்ளாகியிருக்கிறது.தங்கத்தின் விலையை உலக சந்தை தான் நிர்ணயிக்கிறது. அதனை குறைக்கவோ கூட்டவோ மத்திய அரசுக்கு கூட அதிகாரம் கிடையாது. இந்நிலையில், திமுக எப்படி தங்கத்தின் விலையை குறைக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.

    No comments