சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு - ஆவின் நிர்வாகம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, March 27, 2024

சென்னையில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்பு - ஆவின் நிர்வாகம்

 

சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்படி பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து இடங்களிலும் சீரான பால் விநியோகத்தை உறுதிசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் இத்தகைய காலதாமதத்திற்கு வருந்துவதாகவும், இந்த சூழலில் ஆவின் நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment