பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஒன்பதாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் மூன்று நாட்களாக இரவு பகலாக தொடர் காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை தங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறி பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்தும் பலூன்களை பறக்கவிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர் நூற்றுக்கணக்கான அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.

0 Comments