தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை...... அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். ஆனால், நேற்று 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர் வாக்களிக்கவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில், 2024 தேர்தலில் வாக்குப்பதிவு சுமார் 3% சரிந்துள்ளது. கடந்த தேர்தலை விட 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்துள்ளது.தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆனால் கடந்த 2019 தேர்தலில் தருமபுரி தொகுதியில் 82.33% வாக்குகள் பதிவாகியிருந்தது, எனவே இதுவும் குறைவுதான்.
![]() |
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2019 தேர்தலை விட சற்று அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. மற்ற 35 தொகுதிகளில் கடந்த முறையை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.வட சென்னை தொகுதியில் 2019இல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 60.13% வாக்குகள் பதிவாகியுள்ளது அதேபோல தென் சென்னையில் 2019இல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 54.27% வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.98% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. வடசென்னை தொகுதியில் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அதில் 8 லட்சத்து 99 ஆயிரத்து 679 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 96 ஆயிரத்து 545 பேர் வாக்களிக்க வரவில்லை. தென்சென்னை தொகுதியில் 20 லட்சத்து 23 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 10 லட்சத்து 97 ஆயிரத்து 954 பேர் வாக்களித்துள்ளனர். 9 லட்சத்து 25 ஆயிரத்து 179 பேர் வாக்களிக்கவில்லை. இதே போல மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 50 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 871 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 6 லட்சத்து 22 ஆயிரத்து 290 பேர் வாக்களிக்கவில்லை.
No comments