• Breaking News

    உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து..... 20 பயணிகள் படுகாயம்......

     

    நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் என்று இடத்தில் திடீரென சாலை தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    உளுந்தூர்பேட்டை ஆசனூர் பகுதியில் புறவழிச்சாலையில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆம்னி பஸ் டிரைவர் இதனை கவனிக்காமல் வேகமாக வந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த பயணிகள் ஆசனுர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    No comments