• Breaking News

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 25 சட்டங்கள் மாற்றப்படும் - ப.சிதம்பரம்

     

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், ”நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும்.

    பாஜக அரசு கொண்டுவந்த பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் கட்டாயமாக நீக்கப்படும். முக்கியமாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றிலுமாக திரும்பப் பெறப்படும் “ என்றார்.மேலும், ”விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020, இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா, கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம் ஆகியவை நீக்கப்படும்.

    தொழிலாளர் சட்டங்கள் உட்பட 25 சட்டங்களில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். நாட்டில் வேலையின்மை மிகப்பெரிய அளவிற்கு பெருகி உள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சினையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால், இதுதான் நாட்டின் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை ” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “ எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதத்தை நான் சந்தித்ததே இல்லை. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாக குறைந்துள்ளது. பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. 42 சதவீத வேலையின்மை நாட்டில் நிலவுகிறது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமாகரமான நிலை இதுவாகும்.” என்றார்.

    No comments