கீழ்வேளூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.62250 பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காமராஜ் நகர் குருக்கத்தியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஸ்ரீரங்கபாணி தலைமையில் போலீசார் ஜெகன் மற்றும் ராஜேந்திர சாகு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை தாலுக்கா தும்சனபட்டி அஞ்சல் (ம) கிராமத்தை சேர்ந்த வீரநெல்லு த/பெ மாரியப்பன் என்பவர் அரைசஸ் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் அவரிடம் சோதனை செய்யப்பட்டது அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 62250/- ரூபாய் இருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்துனர் கவிதாஸ் மற்றும் சந்திரகலாவிடம் பணத்தை ஒப்படைத்தனர்.பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கீழ்வேளூர் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி.க
விளம்பர தொடர்புக்கு அணுகவும் 9788341834
No comments