• Breaking News

    தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.....

     

    மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சித்திரை கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'ஓம் நமச்சிவாய' என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

    No comments