பழநி: காவல்நிலையத்தில் பெண் போலீஸாருக்கு வளைகாப்பு.....
திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இரு காவலர்களும் கர்ப்பமாக உள்ளனர். இந்நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் இருவருக்கும் மகளிர் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இரு காவலர்களுக்கும் பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான உணவு வகைகள் செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பழநி துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வியின் ஏற்பாட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு கர்ப்பிணிகளை வாழ்த்தினர்.கர்ப்பமாக உள்ள பெண் காவலர்களுக்கு உடன் பணிபுரியும் சக காவலர்கள் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முயற்சிக்கு பொதுமக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
No comments