நாகை: இரவுநேரத்தில் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.... பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை......
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஓன்றியம் இணைந்து வரும் கீழ்வேளூர் சட்டமன்றதொகுதியில் உள்ள பிரதாபராமபுரம் ஊராட்சி மற்றும் ஆற்றங்கரையோரம் உட்பட பல கிராமங்கள் இணைந்துள்ள இப்பகுதியில் செல்லும் நாகப்பட்டினம் முதல் வேதாரண்யம் வரை செல்லும் SH-278 நெடுஞ்சாலையில் மின்கம்பங்கள் இருந்தும் தெருவிளக்கு எரியவில்லை..இரவு நேரத்தில் .கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரிவதில்லை என்பதைவிட எந்த வெளிச்சமும் இல்லை என்பதே முக்கிய தகவலாக உள்ளது.. இதைக்கண்டுகொள்வது யார்? கேள்வி எழுகிறது பலருக்கு..மாவட்ட நிர்வாகமா? வட்டார வளர்ச்சிஅலுவலரா?மின்சாரத்துறையா? நெடுஞ்சாலைத்துறையா? இரண்டும் இணைந்த ஊராட்சி தலைவர்களா? பொதுமக்கள் பிரதிநிதி என்று உலாவரும் எந்த நிதிகள் மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுப்பது யார்..? இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகனஓட்டிகள் இந்த வழியே இரவு நேரத்தில் பயணிக்கும்பொழுது சாலைவிபத்து அதிகரிக்கவும் நேரிடுகிறது..என்றும் சமூகவிரோதிகள் இந்த இடங்களில் இரவு நேரங்களில் சாலைஓரத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு அச்சப்பட வைக்கிறார்கள் என்பதும் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் உள்ளது .விரைந்து தெருவிளக்கு எரிய நடவடிக்கை தேவை....செய்வது யார்? விரைந்து சீரமைப்பது யார்?
நாகை நிருபர் சக்கரவர்த்தி
தொடர்புக்கு 9788341834
No comments