ஆகப்பெரும் காதலும் கெஞ்சும் கொஞ்சும் கொஞ்சம்


 கொஞ்சம் தனிமை

 கொஞ்சம் புத்தகங்கள்

 கெஞ்சல் சிரிப்பு

 கொஞ்சம் தேநீர்

 கொஞ்சும் பேனாக்கள்

 கெஞ்சல் இசை

கொஞ்சம் காதல்

கெஞ்சும் காமம்

கொஞ்சல் இசை

கொஞ்சம் வலி கொஞ்சம் இயற்கை


கையிலொரு பேனாவும் காகிதமும் இது போதுமே இந்த நீண்ட பிறவியை கடந்து விட்டு,


 அத்துடன்

 மெலிதான ஒரு சிநேகம்

 உதட்டோரம் சிறு புன்னகை

 கைகோர்த்து அடிதூர நடை

 அழுத்தமாய் ஒரு அரவணைப்பு

 தன் வார்த்தைக்கு செவிமடுத்தல்

 தலை சாயும் மடி

 நீண்டதூர நடைப் பயணிக்கும் பெயரில்லா உறவு

 தன்னை அறியாத தூக்கம்

 இது போதுமே இந்த ஆகப்பெரும் காதலை ஆஸ்வாசமாய் இப் பிரபஞ்சம் கழியும் வரை எடுத்துச் செல்வதற்கு.


A. சத்யா

தமிழ்துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

 ஆகப்பெரும் காதலும்

கெஞ்சும்

கொஞ்சும்

கொஞ்சம்.

 புத்தகத்தின் எழுத்தாளர்

Post a Comment

0 Comments