பத்திரிக்கை தர்மம் பணத்துக்கு விலை போகுமா...? பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்துரை வேதனை


பகுஜன் சமாஜ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சின்னத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

பத்திரிகை துறையில் தன்னுடைய உயிரை துச்சமாக எண்ணி தன் உயிர்நீத்த தியாகிகள் அனைவருக்கும் என்னுடைய வீர வணக்கம்.ஒரு காலத்தில் அரசியல் பலம் கொண்ட பண்ணையார்கள் எத்தனையோ பேரை கொலை செய்துள்ளனர் ஆனால் அதிகாரத்தால் புகார்கள் கூட பதிவு செய்ய துணிவு இல்லாமல் மறைந்தே புதைக்கப்பட்டது.

ஆனால் ஒரு காலகட்டத்தில் பத்திரிகை தோழர்கள் புலனாய்வு செய்து உண்மையான செய்திகளை வெளியிட்டு புகார் கொடுக்காத பிரச்சனை கூட பத்திரிகை  வெளியிட்டு பின்னர் காவல்துறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .இது மாதிரி பல பிரச்சனையில் தலையிட்டு எத்தனையோ பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

 அப்படி உயிர் விட்ட தியாக செம்மல் பத்திரிகை நிருபர்கள் தியாகத்தை அறந்தாங்கியில் ஒரு சில பத்திரிகை நிருபர்கள் குழி தோண்டி புதைத்து வருகிறார்கள்.நான் எல்லாம் நிருபர்களை குறை சொல்ல வில்லை; ஒரு சில பத்திரிகை ஊடக நிருபர்களை மட்டும் சொல்கிறேன்.

இந்த நிருபர்களை பற்றி கூட உள்ள நிருபர்களிடம் கேட்டால் இது என்ன இதை விட நிறைய செய்திகள் இவர்கள் மேல் உள்ளது; பணம் மட்டுமே இவர்களுக்கு தேவை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று கூறுகிறார்கள்.பலபேர் தியாகம் செய்து உருவாக்கி ஊடகத்தில் இன்று சில கருப்பு ஆடுகள் உள்ளே சென்று உழைக்கும் மக்களுக்கு எதிராக இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.

உழைக்கும் மக்களுக்காக போராடி உண்மையான செய்திகளை கொண்டு வந்த ஊடகம் இன்று ஒரு சில தவறான நிருபர்களால் ஊடகம் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.

பல தியாகத்தால் உருவான ஊடக நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்? உங்கள் பத்திரிகை துறையில் பணிபுரியும் மாவட்ட  நிருபர்களை பற்றியும் அவர்கள் போடும் செய்திகளையும் கொஞ்சம் விசாரணை செய்யுங்கள்.சில நிருபர்கள் பல பேர் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி பணம் பார்த்து வருகிறார்கள் .

மிகவும் வேதனையாக இருக்கிறது; ஒரு கொலையை உண்மையை வெளியே கொண்டு வர காரணமாக இருக்க வேண்டிய ஊடகம் செய்தித்தாள்கள்; செய்தியாளர்கள் குற்றவாளிக்கு உடந்தையாக செயல்படுகின்றன.

அரசியல், பணம் படைத்தவர்களுக்கு எதிராகவும், உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக இருந்து வந்த ஊடகத்தில் ஒரு சில தவறான நிருபர்களால் கலங்கம் உருவாகும் சூழ்நிலையில் உள்ளது.இதை கண்டிப்பாக பத்திரிகை துறையில் உள்ள நிர்வாக ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இதற்கு உதாரணம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருவாப்படி கணேசன் மகன் விக்னேஷ் என்ற இளைஞர் 26/03/2024 படுகொலை செய்யப்பட்டார் இவர் கொலை நடந்த இடத்தை புலனாய்வு பத்திரிகை நிருபர்கள் கலத்தில் ஆய்வு செய்து வெளியிட வேண்டும்.

அப்படி ஆய்வு செய்து இந்த செய்தியை சில ஊடகங்கள் உண்மைக்கு எதிராக செய்தி பரப்பிய ஊடக நிருபர்களையும் வெளியிட வேண்டும் என்று அறந்தாங்கி பகுதி உழைக்கும் மக்களின் கோரிக்கை ஆகும். என தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments