உடைதல்...... ஆகப்பெரும் காதல் கெஞ்சும் கொஞ்சும் கொஞ்சம் என்னும் புத்தகத்திலிருந்து - MAKKAL NERAM

Breaking

Thursday, April 4, 2024

உடைதல்...... ஆகப்பெரும் காதல் கெஞ்சும் கொஞ்சும் கொஞ்சம் என்னும் புத்தகத்திலிருந்து


 ஒரு சொல்லோ அல்லது செயலோ போதுமானது!

 ஒரு உறவினை துண்டிக்க செய்வதற்கு!

 அதற்குப் பின்பு அந்த உறவில் பயணம் செய்பவர்கள்

 யாவரும் பேருந்து பயணத்தில் விழாமல் இருக்க கம்பியை பற்றி கொள்வதைப் போல பற்றிக் கொள்கிறார்கள்.


 ஒரு கட்டத்தில் கை வலி தாங்காமல் அக் கம்பியை விட்டு வேறொரு கம்பியை பற்றத் தொடங்கி விடுகிறார்கள்..


 புரிதல் இல்லாத உறவுகள்

 புன்னகை இல்லாத வார்த்தைகள்

 இந்தத் தனிமையும்

 தேவைப்படாத மௌனமும்


 உணர்ச்சி இல்லாத ஐ லவ் யூக்கள்

 கடமைக்கு சொல்லப்படும் மிஸ்யூ க்கள்


 இவை யாவும் காதல் பிரிவுக்கு சிறு துளி காரணமாகின்றன.


 ஆகப்பெரும் காதல்

கெஞ்சும்

கொஞ்சும்

கொஞ்சம்


 என்னும் புத்தகத்திலிருந்து


ஆசிரியர்

A. சத்யா

 தமிழ் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்

No comments:

Post a Comment