• Breaking News

    அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு


    இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து அத்தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கரூர் ஆவுடையார்கோயில் அறந்தாங்கி  உள்ளிட்ட இடங்களில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தேர்தல் பரப்புறையில் ஈடுபட்டார்.

    கரூர் கிராமத்தில் பேசிய ராஜா கண்ணப்பன் கூறுகையில்:

    அவர் பேசுகையில் பிரதமர் மோடி ஏன் ஜெயிக்க கூடாது என்று நினைக்கிறோம் என்றால் அவர் அதிபர் ஆட்சியை இந்தியாவில் நடைமுறைப்படுத்த பார்க்கிறார் என்றும் அவர் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயக முறையில் ஆட்சி நடக்காது என்றும் அதனால்தான் ஜனநாயக வழியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக கூட்டணியினர் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    No comments