வெற்றிகரமாக வெளியிடப்பட்டது ஆகப் பெரும் காதல் புத்தகத்தின் அட்டைப்படம்...... உதவிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி......
பாரதியாரின் வரிகளோடு
காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
ஆகப் பெரும் காதல்
கெஞ்சும்
கொஞ்சும்
கொஞ்சம்.
*காதல்*
இந்த ஒற்றை வார்த்தை போதுமானது.
இந்த நீண்ட, நெடும் தூர வாழ்க்கை என்னும் நடைப்பயணத்தை தொடர்ந்து பயணிக்க,,
அதுவும் ஆகப் பெரும் காதல் என்றால் சொல்லவா வேண்டும்?
இந்த பிரபஞ்சம் முடியும் வரை,, முடிந்த பின்பும் கூட
காதல் என்ற உணர்வு மட்டுமே போதுமானது.
காதல்
இந்த உலகத்தை பிரமித்து பார்க்க வைக்கும்,
தானாய் சிரிக்க வைக்கும்,
இரவு நேரத்தின் நடு ஜாமத்தை தேட வைக்கும்,
தனிமையை அதீதம் தேட வைக்கும்,
மௌனமாய் அழ வைக்கும்,
பிடித்த உணவு பிடிக்காமல் போகும்,
பிடிக்காத உணவு முழு நேர உணவாகிப் போகும்,
உறக்கத்தை கெட்டொழிய வைக்கும்,
நனவே கனவாகிப் போகும்,
வெள்ளை காகிதம் கிறுக்கப்படும்,
குவளைத் தேனீரின் சுவை மாறுபடும்,
அறை அசுத்தமாகும்,
அவ்வறையே சொர்க்கமாகும்,
எங்கும் அவன்(ள் ) குரல் படரும்,
காணுமிடமெல்லாம் நினைவுகள் மேலோங்கும்,
கட்டில் கணமாகும்,
தலையணை சுகமாகும்,
சூடிய பூவுக்கு அர்த்தமில்லாமல் போகும்,
கண்ணாடியின் பாதரசம்
வற்றிப் போகும்,
பசி, தூக்கம், யாவும் மறந்து பித்து பிடித்த ஓர் சுகமான நிலை
.*காதல்*
எப்படியோ அந்த காதல் யாவரையும் வந்தடையும்.
* விவரிக்க முடியாத.
விளக்கம் தர இயலாத
உயிரில் கலந்திட்ட உணர்வுக்கு
என்ன கைமாறு செய்திட!!
இந்த கவிதைகளை காணிக்கையாக்குவதைத்தவிர!!
* காதல் ஓர் சரணாகதி நிலை
* பைத்தியத் தனத்தின் அறிவின் உச்சம்
* உன்னதத்தின் ஊற்று.
இந்த ஆகப் பெரும் காதல் உங்களுடன் நிச்சயம் ஊடுறும் என்பதில் ஐயமில்லை..
ஆசிரியர்
A. சத்யா
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
No comments